உடம்பு சரியில்லை..! ஹாஸ்பிடலுக்கு சென்ற 19 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட கதி! அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்!

கன்னியாகுமரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் இவரது மகள் சைமா 17, தலைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சைமாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து சைமாவின் உடல்நிலை மீண்டும் மோசமாகியுள்ளது. இதையடுத்து அவரை திரும்பவும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் சிலர் மருத்துவமனை ஊழியர்களை கடுமையாக தாக்க தொடங்கியுள்ளனர்.

மற்றும் மருத்துவமனையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இதை இடத்தில் போராட்டக்காரர்கள் சிலர் மருத்துவமனை மீது கற்களை வீசியுள்ளனர். இதையடுத்து ஆயுதப்படை போலீசார் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பதற்றம் நிலவியது.