பேஸ்புக் காதல்! நெருக்கமாக இருக்கும் புகைப்படம்! இளம் பெண்ணிடம் இருந்து சவரன் சவரனாக நகை பறித்த பலே பையன்!

காதலிப்பதாகக் கூறி, இளம்பெண்ணிடம் இளைஞன் ஒருவன், பணம், நகைகளை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வடசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ''நரேஷ் (19) என்ற இளைஞனை நான் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தேன். ஆனால், அவன், என்னை விட என்னிடம் இருக்கும் பணம், நகைகள் மீதே கவனமாக இருந்தான். ஒவ்வொரு முறையும் புதுப்புது பொய் சொல்லி, என்னிடம் இருந்து பணம் மற்றும் தங்க  நகைகளை பிடுங்கிக் கொண்டான். இதுதவிர, அவனுக்காக, என் பெற்றோருக்கு தெரியாமல், வீட்டில் இருந்து 5 சவரன் தங்க நகைகளை திருடிக் கொடுத்துள்ளேன்.

ஆனால், எதையும்  அவன் திருப்பி தரவில்லை. இது மட்டுமின்றி, காதலிக்கும்போது, எடுத்த புகைப்படங்களை காட்டி, வெளியில் சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறான். நீங்கள்தான், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று மாணவி கண்ணீர் மல்க கூறியிருந்தார். 

இதன்பேரில், குறிப்பிட்ட இளைஞரை அழைத்து விசாரித்த போலீசார், அனைத்தும் உண்மை என உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த நபரை கைது செய்தனர்.