மாணவிகளுடன் விதவிதமாக உல்லாசம்! கல்லூரி முதல்வர் செல்போனில் சிக்கிய வீடியோக்கள்! அதிர்ச்சியில் பெற்றோர்!

திருவனந்தபுரம்: கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.


திருவனந்தபுரம் அருகில் உள்ள அம்பலத்தாரா, கோவில் விளாகம் பகுதியை சேர்ந்தவர்  மனோஜ். இவர், கேரள பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பாக, தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில், பிரின்சிபால் பணியை மனோஜ் செய்தார். அதன்பிறகு, அரசு வேலை கிடைக்கவும், அந்த வேலையை விட்டுவிட்டார்.  

சமீபத்தில்தான் மனோஜின் மனைவி தற்கொலை செய்துகொண்டார். இதற்கு, மனோஜ்தான் காரணம் என, அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், மனோஜின் செல்ஃபோனை பறிமுதல் செய்து, ஆய்வு நடத்தினர். அதில், ஏராளமான ஆபாச படங்கள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக, மனோஜ் கல்லூரி மாணவிகள் பலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் அதிகளவு இருந்துள்ளன.  

இதன்பேரில், மனோஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கல்லூரி பிரின்சிபாலாக இருந்தபோது, சில மாணவிகளை மிரட்டி, பலாத்காரம் செய்ததும், அவற்றை ஆபாச படங்களாக போனில் பதிவு செய்து வைத்ததையும் மனோஜ் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்துதான் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். எனவே, போலீசார் காம வெறி பிடித்த மனோஜை கைது செய்தனர்.