ஓடும் கார்! 5 இளைஞர்கள்! ஒரே ஒரு மாணவி! கதற கதற பலாத்காரம்! வீடியோ வைரல்!

கர்நாடக மாநிலம் புட்டூரில் கல்லூரி மாணவியிடம் சில 19 வயது நபர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ இணையதளத்தில் பரவிய நிலையில் போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.


ஒரு காருக்குள் அந்த மாணவியை சுற்றி அமர்ந்து சில இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியது. அது குறித்துவிசாரணை மேற்கொண்ட் போலீசார் பெண்ணைக் கண்டு பிடித்து அது தொடர்பாக புகார் அளிக்க அறிவுறுத்தினர். 

இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதமே நடைபெற்றதாகத் தெரிவித்த அந்த இளம் பெண், அத்துமீறலில் ஈடுபட்டவர்களும் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் என்று தெரிவித்தார். அந்த நபர்களின் மிரட்டலுக்கு அஞ்சி யாரிடமும் தனக்கு நேர்ந்ததை தெரிவிக்காமல் இருப்பதாகவும் அந்தப் பெண் கூறினார். 

இந்நிலையில் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த போலீசார்  அந்த வீடியோவை யாரும் பகிர்ந்தாலோ, செல்ஃபோன்களில் பாதுகாத்தாலோர் கடும் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தனர். வாட்ஸ் அப் நிறுவனத்துக்கும் கடிதம் எழுதி அந்த வீடியோ பரவாமல் தடுத்தனர்.

வீடியோவின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களான பிரஜாவல், கிஷன், ப்ரக்யாத், குருநந்தன், சுனில் என்ற 5 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.