போன் போட்டா எடுக்க மாட்றார்! நம்பரை பிளாக் பண்ணிட்டார்! ஜோதிமணி கதறல்!

கரூர்: என்னுடைய செல்ப்போன் நம்பரை கரூர் கலெக்டர் பிளாக் செய்துள்ளார்- எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு


கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக, ஜோதிமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி துணையுடன், பல்வேறு மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், கரூரில் குடிநீர் பிரச்சனை அதிகமாக தலைவிரித்தாடுவதற்கு மாவட்ட ஆட்சியர் சார்பில் போதிய ஒத்துழைப்பு இல்லாத்து தான்  காரணம் என்றும் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்

இதுபற்றி மேலும் அவர் பேசுகையில், ''கரூர் தொகுதி முழுவதுமே தண்ணீர் பிரச்னை காணப்படுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன், மாவட்ட குடிநீர்திட்ட பணிகள் பற்றிய கலந்தாய்வு கூட்டத்திற்கு எம்.பி என்ற முறையில் என்னை யாருமே அழைக்கவில்லை. ஒரு பொதுப்பிரச்னையில் இப்படி பாரபட்சம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை.

அதிமுக அரசு நடப்பதால், மற்ற கட்சியினர் பொதுமக்கள் சேவை செய்யக்கூடாது என்று சொல்வதைப் போல, கரூர் மாவட்ட நிர்வாகத்தில் செயல்பாடு உள்ளது.

தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கருத்து மோதலில் எனது அலைபேசி எண்ணை கரூர் ஆட்சியர் கால் பிளாக் செய்துவிட்டார். தற்போது, நான் எம்பியான பிறகும், அவர் அதை மாற்றவில்லை. ஒரு எம்.பி யின் கால் பிளாக் செய்வது மக்கள் நலனுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா . மக்கள் நலம் குறித்த  பிரச்னைகளை நான் ஆட்சியரிடம் சொல்லக்கூடாதா ?,'' என்று சராமரியாக கேள்விகளை தொடுத்துள்ளார் , கரூர் எம்.பி ஜோதிமணி.