சீசர் இல்லாமல் என்னால் வாழ முடியாது..! நாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட கோவை இளம்பெண்! அதிர வைக்கும் சம்பவம்!

குரைத்து குரைத்து தொந்தரவு செய்யும் நாயை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு தந்தை கூறியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது.


காதலுனுக்காக தற்கொலை, வரதட்சனை கொடுமையால் தற்கொலை, வயிற்று வலியால் தற்கொலை, மாமியார் திட்டியதால் தற்கொலை, மதிப்பெண் எடுக்கவில்லை என்பதால் தற்கொலை என தற்கொலை செய்துகொள்வதற்கு ஏதோ ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது. ஆனால் பாசமாக பார்த்து பார்த்து வளர்த்த நாயை வீட்டை விட்டு அப்புறப்படுத்துமாறு தந்தை திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேள்விப்படுவது இதுவே முதல் முறை எனலாம். 

கோவை சாமி செட்டிப்பாளையத்தை சேர்ந்த கவிதா என்பவர் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக சீசர் என பெயரிடப்பட்ட நாயை வளர்த்து வந்தார். இவர் வளர்க்கும் நாயை இரவில் அடிக்கடி குரைத்து சப்தம் எழுப்புவதால் பலருக்கு தூக்கம் வரவில்லை. அக்கம் பக்கத்தினர் நாய் மிகவும் தொந்தரவு செய்வதாக கவிதாவின் தந்தை பெருமாளிடம் தெரிவித்தனர். 

இதனால் நாயை எங்கேயாவது கொண்டு விடுவது என பெருமாள் முடிவு செய்ய அதற்கு கவிதா சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் பெருமாள் மகள் கவிதாவை திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் மனம் உடைந்த கவிதா "வீட்டில் உள்ள அனைவரும் நான் செல்லமாக வளர்த்த சீசரை நன்றாக பார்த்துகொள்ளுங்கள். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கவிதா எழுதியதாக கூறப்படும் கடிதம் உண்மையிலேயே அவர் எழுதியதா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். காதலுக்காக தற்கொலை செய்து கொண்டிருந்தால் காவல்துறை நம்பும். நாய்க்காக தற்கொலை என்றால் இதை படிக்கும் நீங்கள் நம்பபோவதில்லை. நாங்களும்தான்…