தாயுடன் தூங்கிய பெண் குழந்தை நள்ளிரவில் மாயம்! பிறகு அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்!

கோவையில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை, அன்னூரில் கனகராஜ் ஜெ.சி.பி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கனகராஜ்- காஞ்சனா. இருவருக்கும் திருமணமாகி இரண்டரை வயதில் அமிர்தா எனும் பெண் குழந்தையுள்ளது.

இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று கனகராஜ் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். இரவு தாய் காஞ்சனா அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அதிகாலையில் காணமற்போனதால் பயந்து போனவர்கள் ஆளுக்கு ஒருப்புறம் குழந்தையை தேடி அலைந்த போது, அருகில் இருந்த கிணற்றில் பிணமாக மிதந்த குழந்தையை பார்த்து அதிர்ந்துப் போனார்கள்.

இதனை அடுத்து தகவலின் பேரில் வந்த போலீசார், குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்தினரா ?அல்லது முன் விரோதம் காரணமாக இப்படி நேர்ந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.