வீட்டுக்கு ஒரு மரக்கன்று கொடுத்து வாக்கு கேட்கும் வேட்பாளர்! சூலூர் சுவாரஸ்யம்!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்தியாசமான முறையில் மரக்கன்றுகளை கொடுத்து வாக்குச் சேகரித்து வருகிறார்.


மக்களை ஏமாற்றுவதையே முதலீடாகக் கொண்டு செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கு தேவையான சேவைகளை செய்வார்களோ அல்லது வழக்கம் போல நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்களோ. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசம் காட்டும் முயற்சியில் பின் வாங்கவில்லை 

புதிதாக கடை விரித்திருக்கும் அரசியல் கட்சிகளையும் வித்தியாசமான பிரச்சார மோகம் தீவிரமாகவே ஆட்கொண்டிருக்கிறது. அந்த வகையில்சூலுர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் பிரச்சாரத் துண்டுச் சீட்டுடன் மரக்கன்றுகளையும் கொடுத்து வாக்குச் சேகரித்து வருகிறார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்குவதாகவும் தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தான் வெற்றிபெற்றால் சூலூரில் நிலவும் சாக்கடைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படு என்று அவர் தெரிவித்தார்.