விடிய விடிய சரக்கு வித் சைடிஸ்! கோவையை கலக்கும் டீக்கடை பார்கள்!

கோவையில் டீக்கடை செட்டப்பில் மதுவை விற்பனை செய்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு.


கோவை கருமத்துப்பட்டியில் டீக்கடை ஒன்றில் சட்ட விரோதமாக, மது விற்பனை செய்யபடுவதாக அப்பகுதி மக்கள் கொடுத்த இரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்.

இதில் டீக்கடை போன்ற செட்டப்பில் கடந்த சில மாதங்களாக மது விற்பனை மற்றும் சைடிஸ் , கண்ணாடி டம்ளர் என பார் நடத்த தேவையான செட்டப்புடன் நூதன முறையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

மேலும் மது வாங்கி வந்து இங்கு குடிப்பவர்களுக்கு என தனியாக சார்ஜ் செய்து வசூலிப்பது அம்பலமானது. மேலும் அதே பகுதியில் சில தள்ளு வண்டியிலும் இந்த நூதன முறையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலை வீசித் தேடி வருகின்றனர்.