கோவை சரவணா ஸ்டோர் கடைக்கு சீல்! அதிரவைக்கும் காரணம்!

கோவையில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.


கோவை ஒப்பணக்கார வீதிகள் பல அடுக்கு மாடிகளை கொண்ட சரவணா செல்வரத்தினம் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை பார்க்கிங் என்று அனுமதி பெற்று விட்ட இடத்தை குடோனாக பயன்படுத்தி வந்துள்ளது. மேலும் கடைக்கு முன்புறம் காலி இடம் விட வேண்டும் என்கிற விதியையும் சரவணா செல்வரத்தினம் நிர்வாகிகள் கடைபிடிக்கவில்லை.

இதனையடுத்து கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல் வைக்கமாறு சென்னை உயர்நீதிமன்றம் கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று அதிகாலை சரவணா செல்வரத்தினம் கண்டித்து மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் குடோனாக பயன்படுத்தி வந்த பார்க்கிங் பகுதிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை சரவணா செல்வரத்தினம் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பார்க்கிங் என்று அனுமதி பெற்றுவிட்டு அந்த இடத்தில் குடோனை வைத்துள்ள சரவணா செல்வரத்தினம் கடையின் செயல்பாடு கோவை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.