ஓடும் ரயில்! தனிமையில் இளம் பெண்! ராங் டச் செய்த இளைஞர்கள்! போதையில் அரங்கேறிய விபரீதம்!

கோவையில் ஓடும் ரயிலில் பெண்ணிற்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக அப்பெண் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


ஹைதராபாத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவா சென்றுள்ளார். இதையடுத்து அங்கு வேலை முடிந்த நிலையில் திரும்பவும் கோவை வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஜபால்பூர் அதிவேக ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி உள்ளார். கண் அயர்ந்த நேரத்தில் ஏதோ மேலே படுவதாக உணர்ந்து அவர் விழித்துள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த சில நபர்கள் அப்பெண்ணை சீண்டியுள்ளனர். கேலி கிண்டல் மற்றும் பாலியல் முறையில் தொந்தரவு செய்துள்ளனர் .இதனால் ஆத்திரமடைந்த பெண் அவர்களை கண்டபடி திட்டியுள்ளார்.

அப்போதும் அந்த நபர்கள் அப்பெண்ணை கிண்டல் செய்து வந்துள்ளனர் இதனால் மனமுடைந்த அவர் முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்து ஏசி பெட்டிக்கு  மாறினார். அங்கு சென்ற குடிமகன்கள் தொடக்கூடாத இடத்தில் தொட்டு சில்மிசம் செய்துள்ளனர். பின்னர் கோவை வந்து இறங்கியதும் ட்விட்டர் மூலம் கொங்கன் ரயில்வே பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் இதுவரை ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பலரின் புகைப்படங்களை அப்பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர். மற்றும் இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் யாரேனும் உங்களை தொந்தரவு செய்தனர் என கேட்டனர் அதற்கு அப்பெண் அந்த படத்தில் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரயிலில் அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை ரயில்வே போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மற்றும் அந்த நபர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எனவும் எந்த ரயில் நிறுத்தத்தில் ஏறியவர்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.