10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டி! தல ஜெயித்தாரா? தோத்தாரா? ரிசல்ட் இதோ!

கோவை: 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் நடிகர் அஜித் பங்கேற்று அசத்தியுள்ளார்.


10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்று அசத்திய அஜித்!

சினிமா நடிப்பை கடந்து விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களில் ஆர்வம் காட்டும் நடிகர்களில் அஜித் முக்கியமானவராக உள்ளார். டிரோன் வடிவமைத்தல், பைக் ரேஸிங் செய்வது உள்ளிட்டவற்றில் அஜித் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்த நிலையில்,  தற்போது துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் பங்கேற்று வியப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், கோவையில் நடைபெற்று வரும் தமிழக அளவிலான 45வது துப்பாக்கிச் சுடும் போட்டியில் நடிகர் அஜித் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்றார். சென்னை ரைஃபிள் கிளப் சார்பாக அவர் இந்த போட்டியில் பங்கேற்றார். அவரது வருகை முடிந்தவரை வெளியில் தெரியாத அளவுக்கு மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவர் கோவை விமான நிலையத்திற்கு வந்தது முதலாகவே விசயம் காட்டுத் தீ போல பரவ தொடங்கியது. உடனடியாக, அவரது ரசிகர்கள் கோவையை நோக்கி வர தொடங்கினர். இதனால், போட்டி நடைபெற்ற காவலர் பயிற்சி மையத்தைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதால், போலீசார் பாதுகாக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.

இந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் 400 பாயின்ட்களுக்கு, 314 பாயின்ட்களை அஜித் பெற்றது குறிப்பிடத்தக்கது.