கொத்து கொத்தாக செத்து விழுந்த மயில்கள்..! சூரிய கிரகணத்தின் போது கோவையில் அரங்கேறிய பயங்கரம்! பகீர் காரணம்?

வளைய சூரிய கிரகணத்தின்போது கோவையில் 5 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் அறிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நடைபெற்றது. இதை தமிழகத்தில் தொலைநோக்கி, சூரிய வடிகட்டி கண்ணாடி, பிம்ப பிரதிபலிப்பு முறைகளில் கிரகணத்தை பார்வையிட்டு ஏராளமான பொதுமக்கள் மகிழ்ந்தனர்.

பூமியின் துணைக்கோளான நிலவு, பூமியை நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்றது. அதேபோல், சூரியனை, பூமி நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. இந்த இயற்கையான நிகழ்வில், சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. 

இதற்கிடையே இந்த அரிய நிகழ்வின்போது கோவை காந்திபுரம் அருகே 5 மயில்கள் உயிரிழந்துள்ளன. வானில் நிலவும் மாற்றங்களை பறவைகளால் உணர முடியும்.

வெளிச்சம் குறைந்து, சற்று இருட்டடித்தாலும் தங்களது கூடுகளை தேடிச் சென்றுவிடும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கிரகணம் தொடங்கும்போது பறவைகள் ஒலியை எழுப்பும் என்றும், கிரகணம் நடந்துகொண்டிருக்கும்போது எந்தப் பறவையும் வெளியில் வராது என்றும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

திடீரென்று ஏற்படும் மாற்றத்தால் எளிய இதயம் கொண்ட பறவைகள் பதற்றமும், பயமும் அடைந்து இறந்து போவதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக மயில்களுக்குப் பல்வேறு ஆபத்துகள் இருக்கின்றன. பல இடங்களில் விஷம் வைக்கின்றனர்.

எனவே, வேறு காரணங்களாலும் மயில் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.