பல் வலி மாத்திரைக்குள் இரும்புக் கம்பி! வாயில் போடும் போது கண்டுபிடித்த அதிர்ச்சி! கோவை இளைஞரின் பகீர் அனுபவம்!

கோவை: மாத்திரைக்குள் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் உள்ள கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (24 வயது). கார் சீட் கவர்  போடும் கடையில் பணிபுரியும் இவர், பல் வலி காரணமாக, அருகில் உள்ள மருந்துக்கடையில் மாத்திரை வாங்கியுள்ளார். ஆனால், மாத்திரை கவரை பிரித்து பார்த்தபோது, அதில் மாத்திரைக்கு நடுவே இரும்புக் கம்பி இருந்ததை பார்த்து, முஸ்தபா அதிர்ச்சி அடைந்தார்.  

இதுபற்றி தனது நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரிடமும் தகவல் தெரிவித்த முஸ்தபா, பிறகு சம்பந்தப்பட்ட மெடிக்கல் நிர்வாகத்திடம் புகார் செய்தனர். உடனே, மெடிக்கல் உரிமையாளர், இது சம்பந்தப்பட்ட மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் தவறு.

இதுபற்றி ஏதேனும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் உரிய ஒத்துழைப்பு தருகிறோம், எனக் கூறியுள்ளனர். இதன்பேரில், அடுத்தப்படியாக சுகாதாரத் துறையில் புகார் அளிக்க தீர்மானித்துள்ளதாக, முஸ்தபா தெரிவித்துள்ளார். 

'சாமானிய மக்கள் அவசர தேவைக்கு, மெடிக்கலைத்தான் நம்புகிறார்கள். அங்கு இப்படி சுகாதாரமற்ற மருந்து, மாத்திரைகள் விற்கப்படுவது ஏற்க முடியாத செயல். மக்களின் உயிர் காக்க வேண்டிய மருந்து நிறுவனங்கள் அஜாக்கிரதையாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது,' என்றும் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.