இடுப்பு எலும்புக்குள் சென்ற ஊசி! காய்ச்சல் சிகிச்சை சென்ற இளைஞனுக்கு நர்சால் ஏற்பட்ட விபரீதம்! கோவை பரபரப்பு!

கோவையில் காய்ச்சலுக்காக ஊசி போட்டுக்கொண்ட இளைஞருக்கு இடுப்பில் கடுமையான வலி ஏற்பட்டதால் ஸ்கேன் செய்து பார்த்தபோது ஊசி உள்ளே உடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.


கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை 26, இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது .இந்நிலையில் 22ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் வைரல் காய்ச்சலாக இருக்கலாம் என கூறி மருந்து மற்றும் மாத்திரைகளை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அப்போது ஊசி போட்டுக் கொண்ட அவருக்கு வீடு திரும்பியதும் இடுப்பில் கடுமையான வலி இருந்துள்ளது. இதையடுத்து அவரும் ஐஸ் கட்டி மற்றும் வெந்நீர் ஒத்தடம் கொடுத்துள்ளார். இருந்தும் சரியாகாத நிலையில் திரும்பவும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.

பின்னர் வேறொரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தம்பிதுரை வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று தனக்கு ஏற்பட்ட வலி பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து இளைஞரின் இடுப்பு பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது உள்ளே ஊசி உடைந்து உள்ளதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து தம்பிதுரைக்கு இந்த செய்தியை தெரிவித்துள்ளனர்.அவர் மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு முன்னர் ஊசி போட்டுக் கொண்ட மருத்துவமனைக்கு சென்று முறையிட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை அவருக்கு சரியான பதில் அளிக்காததால் அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவமனையிலேயே இந்த மாதிரியான செயல்பாடுகள் நடப்பது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.