கோவையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் ஒன்று புகுந்தது. இதனை அலறி அடித்து ஓடிய பெண்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரப்பை ஏற்படுத்தியது.
அது ரொம்ப பெருசா இருக்கு..! ஹாஸ்டல் பாத்ரூமுக்குள் பார்க்க கூடாததை பார்த்து அலறிய பெண்கள்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_17170_1_medium_thumb.jpg)
அண்ணாமலை படத்தில் நடிகை குஷ்பூ தங்கும் லேடீஸ் ஹாஸ்டலில் பாம்பு நுழைந்த சம்பவம் போல் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மகளிர் ஹாஸ்டல் ஒன்று செயல்படுகிறது. அங்கு வேலை பார்க்கும் பெண்கள் உள்ளிட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை ஒரு பெண் கழிவறைக்குப் போயுள்ளார். அப்போது வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு அருகில் ஏதோ நெளிவது போல இருக்கவே என்ன என்று பார்த்துள்ளார். அப்போதுதான் அது ஒரு பாம்பு என்று தெரிய வந்தது. பாம்பை கண்ட அதிர்ச்சியில் அலறி அடித்து வெளியே ஓடி வந்த அவர் மற்ற பெண்களை அழைத்தார். அவர்களும் வந்து பார்த்து அலறி அடித்தனர்.
பின்னர் அங்கு இருந்த பெண்கள், அந்த டாய்லெட் கதவைப் பூட்டி தீயணைப்புப் படையினருக்கும், அந்தப் பகுதியில் உள்ள பாம்பு பிடிப்பவர் ஒருவருக்கும் தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு பாம்பு பிடிப்பவர் விரைந்து வந்து அந்த பாம்பைப் பிடித்து வெளியே கொண்டு வந்தார். பின்னர் அவர், இது கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் என்றும், கடித்தால் உயிர் போயிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லவேளையாக பாம்பு யாரையும் கடிக்காமல் போனதாலும், பெண்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதாலும் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த வகை பாம்புகள் மரங்களின் கிளைகள் வழியாக பாம்புகள் ஊடுறுவ வாய்ப்புள்ளதாக பாம்பு பிடிப்போர் தெரிவித்தார்.
பின்னர், இந்த ராஜநாகத்தின் முட்டைகள் ஏதாவது அந்தப் பகுதியில் இருக்கிறதா என்று தேடி வந்துள்ளனர். இந்த சம்பம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ,எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் இருந்தது பெரிய விஷயம் என்றும் தெரிவித்தார்.