கீழ் ஜாதி சனியனே! அரசுப்பள்ளியில் ஆசிரியரால் தலித் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

கோவையின் அரசு பள்ளியில் மாணவிகளின் ஜாதிப்பெயர் சொல்லி வசைப்பாடியது மட்டும் அல்லாமல் அடித்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு...


கோவை சரவணபட்டியை அடுத்த கந்தசாமி நகரில் இயங்கி வரும்  மாநகராட்சி  ஆரம்ப பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் மூன்று சிறுமிகளை தலைமை ஆசிரியர் ஜாதிப்பெயரைக் குறிப்பிட்டு அழைத்து சனியனே, மூதேவி என வசைப்பாடியதுடன், சரமாரியாக சிறுமிகளை அடித்துள்ளார்.

தலைமை ஆசிரியர் தாக்கியதி கை, கால் மற்றும் தொடை பகுதியில் வீங்கிப்போன 11 வயது சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து கூற அதிர்ந்து போன பெற்றோர் பள்ளிக்கு சென்று கேட்ட போது தலைமை ஆசிரியர் , அலட்சியமாக பதில் அளித்துடன், டிசி வாங்கி கொள்ளவும் கூறியதால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியின் வாசல் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.மேலும் இதே நிலை தொடர்வதால்  அதிருப்தியில் பெற்றோர் சரவணப்பட்டியில் உள்ள பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.