கழட்டி விட்ட காதலியை கத்தியால் குத்திய காதலன்! கோவை சம்பவம்!

கோவையில் இளம் பெண் காதலிக்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது.


கோவை, ஆர். எஸ். புரம் பகுதியில், கேரளாவை சேர்ந்த அமிர்தா என்ற இளம் பெண் வழக்கம் போல தனது, கணினிப் பயிற்சி முடித்த பின்னர், வெளியில் வந்த போது, அங்கு விறு விறுவென வந்த சுரேஷ் என்ற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அமிர்தாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.. சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக சுரேஷை சுற்றி வளைத்துபிடித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார், உடனடியாக அமிர்தாவை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரிடம் ஒப்படைக்கபட்ட சுரேசை விசாரணை செய்த போது, சுரேஷ்- அமிர்தா இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும், கல்லூரில் ஒன்றாக படித்த இருவரும் காதலித்து வந்த தாகவும், கடந்த சில மாதங்களாக அமிர்தா, சுரேஷிடம் இருந்து விலகி இருந்ததாலும் , ஆத்திரமடைந்த சுரேஷ் அமிர்தாவை கத்தியால் குத்தி கொலை வெறித்தாகுதல் நடத்தியதாக ஒப்புகொண்டான்.

இதற்கிடையில் பொதுமக்கள் இளம் பெண் தாக்கபட்டபோது துணிச்சலாக செயல்பட்டதினால், தான் அசம்பாவிதம் ஏதும் நேராமல் தவிர்க்கபட்டதாகவும், பொது மக்கள் எப்போதும் இது போன்ற குற்றங்களை துணிச்சலாக தட்டிக்கேட்க வேண்டும் என காவல் துறையினர் சார்பில் வலியுறுத்தபடுகிறது