கோவை சிறுமி கொடூரக் கொலை! ஒரே ஒரு டீ சர்ட் மட்டும் தான் எவிடன்ஸ்! துப்பு துலக்க உதவுங்கள் மக்களே!

கடந்த மூன்று நாட்களாக கோவையை கண்கலங்க வைத்த சம்பவம், கோவையை அடுத்த பன்னி மடையில் ஏழு வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்.


இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து ஏதாவது விபரம் தெரிந்தால் உடனடியாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்குமாறும் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒரே ஆதாரம் இந்த டீ சர்ட் தான்.அதுவும் நல்ல பிராண்டட் டி-ஷர்ட்.

நல்ல வசதியானவர்கள் அணியும் இந்த டீ சர்ட், விலை குறைந்தது ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும், அதேபோல இந்தக் கொடூர செயலை செய்யும் அரக்கர்கள் தன்னிலை மறக்க கஞ்சா, அபின், போதை ஊசி போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தான் இருக்கக்கூடும். உங்கள் பகுதியில் கஞ்சா விற்பவர்கள் இந்த டீ சர்ட்டை அணிந்து பார்த்துள்ளீர்களா?

யாராவது,எப்போதாவது இது மாதிரியான டீசர்ட் அணிந்து செல்வதை பார்த்திருந்தால், அல்லது ஏதாவது ஒரு கடையில் இதே மாதிரியான டீசட் விற்பனைக்கு வைத்திருந்தாலோ, அது குறித்தான தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கொடூரர்களை களை எடுப்போம்,, காவல் துறையினருக்கு உதவி செய்வோம்.

தகவல் தெரிந்த மக்கள் உடனடியாக 100 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கோவை சிறுமி குறித்த வழக்குக்கு உதவ வேண்டும் என்று கூறி உங்கள் தகவலை தெரிவிக்கலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். மற்றும் சன்மானம் கொடுக்கப்படும்.