மாதவிடாய் பிரச்சனை! சித்த மருத்துவரிடம் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

கோவையில் கல்லூரி மாணவிக்கு தவறான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டடு அந்த மாணவியின் இறப்புக்குக் காரணமாக இருந்த சித்த மருத்துவரின் மீது மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.


கோவை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். சத்யபிரியா கோவை அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சத்தியப்ரியாவிற்கு பல நாட்களாகவே மாதவிடாய் சரியாக நடக்காமல் இருந்துள்ளது.

இதையடுத்து அவரது பெற்றோர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சை அளித்தும் பலன் இல்லாத நிலையில் சித்த மருத்துவத்தை நாடி உள்ளனர். பின்னர் கோவை செல்வபுரத்தில் இயங்கிவரும் மனோன்மணியம் சித்த வைத்திய சாலைக்கு சென்றுள்ளனர்.

அங்கு அரசு அனுமதி பெற்ற குருநாதன் என்ற சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார் சத்யப்ரியா. சில நாட்கள் சிகிச்சையை தொடர்ந்த அவருக்கு உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை. இதையடுத்து சத்தியபிரியாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. நோயின் தீவிரம் அதிகமானது.

இநநிலையில் சித்த மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சத்யப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சத்யப்பிரியாவின் உடலை வாங்க மறுத்தனர் பெற்றோர்கள்.

சித்த மருத்துவர் தவறான சிகிச்சை அளித்து விட்டதாக கூறி அவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சத்யப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேதபரிசோதனை முடிந்து அறிக்கை வந்த பிறகே சித்த வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து கூட்டம் கலைந்து சென்றது.சிறிது நேரம் கோவை அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவியது.

மாதவிடாய் சிகிச்சைக்கு சென்ற இளம் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் கோவையில் மட்டுமல்ல தமிழகத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.