பியூட்டி பார்லரில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! தூக்கில் தொங்கியதால் உறவினர்கள் அதிர்ச்சி!

கோவை அருகே அழகுநிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த ஷோபான என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பாப்பம்பட்டி பிரிவில் உள்ள பெண்கள் அழகு மையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 3 தினங்களுக்கு முன்னர் ஷோபானாவின் பெற்றோரை தொடர்கொண்ட அழகு நிலைய உரிமையாளர் அவருக்கு உடல்நிலை சரியில்லை எனவும் உடனே அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷோபனாவின் பெற்றோர் செய்வதறியாது உடனடியாக அழகு  நிலையம் சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஷோபனாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஷோபனா தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை அல்ல எனக்கூறிய அவரது பெற்றோர் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியலிலும் ஈடுபட்டனர். 

உடற்கூறு ஆய்வறிக்கை கிடைத்த பின்னரே ஷோபனாவின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்ற போலீசார் சமரசப் பேச்சை ஏற்க மறுத்த உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வேறுவழியின்றி அவர்களை குண்டுகட்டாக அப்புறப்படுத்தி காவல்துறையின்ர கைது செய்தனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் அழகுநிலையங்கள் அத்துமீறும் நிலையங்களாக மாறிவருதாக புகார்கள் எழும் நிலையில் அதிக பணம் சம்பாதிக்க மசாஜ் பார்லர்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதால் அத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீதான வன்முறையும் அதிகரிக்க காரணம் என்றே சொல்லலாம்.

ஆனாலும் மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயல் செய்து சம்பாதிப்பதை நிறுத்தினாலே அங்கு பணிபுரியும் பெண்கள் மீதான வன்முறைகள் குறையும் என்பதே பொதுமக்கள் கருத்தாக உள்ளது.