10ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை! பிறகு காம லீலை! ஆட்டோ டிரைவரின் விபரீத செயல்!

கோவை அருகில் காந்திபுரத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி தானியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார், அவரை வாடிக்கையாக பள்ளிக்கு அழைத்து செல்லபவர் ஆட்டோ டிரைவர் மதியழகன். சிறுமியின் பெற்றோர் வீட்டை மாற்றி  கோவை குணியமுத்தூர் குளத்துபாளையம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர் .

இந்த நிலையில் நான்கு தினங்களுக்கு முன்னர் தான் சிறுமி காணாமல் போயுள்ளார், இதற்கிடையில் மதியழகன் தொடர்ந்து சிறுமியை பார்பதற்க்காக கடந்த சில நாட்களாக  குளத்துபாளையம் வந்து சென்றுள்ளார். இதன் அடிப்படையில் சந்தேகமடைந்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில்  குணியமுத்தூர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவுசெய்து நடத்திய விசாரணையில் சிறுமியை  கடத்திய ஆட்டோ டிரைவர்  மதியழகன் கடத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து அவனை கைது செய்து போக்சோ சட்டத்தில்  சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில் சிறுமியை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் போது காதல் வலை விரித்துள்ளான் மதியழகன். இதில் மயங்கிய மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளான். இதனை ஒரு கட்டத்தில் மாணவியின் பெற்றோர் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்தே அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சென்றனர். பிறகு தான் மாணவியை மீண்டும் ஏமாற்றி அழைத்துச் சென்று மதியழகன் குடும்பம் நடத்தியுள்ளான். 14 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.