4 ஆப்பரேஷன்! ஒற்றைக் கால் அகற்றம்! தொடரும் சிகிச்சை! அதிமுக கொடிக் கம்பத்தால் அனுராதாவுக்கு ஏற்பட்ட விபரீதம்!

கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தால் விபத்து ஏற்பட்டு மாணவி படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் லாரி ஓட்டுரின் அஜாக்கிரதையே விபத்துக்குக் காரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அனுராதா என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நவம்பர் 11ம் தேதி காலையில் அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது முதலமைச்சர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற் வருவதற்காக அதிமுக சார்பில் கொடிக் கம்பம் நடப்பட்டிருந்து.

ஒரு கம்பம் சரியாக கட்டப்படாமல் இருந்ததால் காற்றின் வேகத்தில் திடீரென கீழே விழுந்தது. அந்தக் கொடிக்கம்பம் விழும்போது அதே நேரத்தில் இந்த இடத்தை அனுராதா கடக்க நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதே நேரத்தில் வந்த லாரி அனுராதாவின் கால்கள் மீது ஏறியது. இதில் அனுராதா பலத்த காயம் அடைந்தார். கடந்த 5 நாள் அளித்த சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது இடதுகால் மிகுந்த சேதம் அடைந்திருந்ததால் அது அகற்றப்பட்டுள்ளது. 

இந்த விபத்துக் குறித்து பேட்டி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடிக்கம்பம் சாய்ந்த விபத்து நடந்த சம்பவம் தன்னுடைய கவனத்திற்கு வரவில்லை என தெரிவித்தார்.

அனுராதா மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு காலை இழந்து இன்னும் குணம் அடையாமல் இருக்கும் அனுராதா என்ற பெண்ணை காப்பாற்ற தமிழக அரசு முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் திமுக அந்த குடும்பத்திற்கு துணை நிற்கும் என்றும் அனுராதாவுக்கு செயற்கைக் கால் பொருத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை திமுக செய்து தரும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்நிலையில் லாரி ஓட்டுரின் அதிவேகமாக லாரியை ஓட்டிவந்ததே அனுராதா விபத்தில்சிக்க காரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்துக்கும் அ.தி.மு.க கொடிக்கும் சம்பந்தமில்லை என்று போலீஸ் கூறியது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.