ரசிகர்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறார் நடிகர் விஜய்! எடப்பாடி அதிரடி!

100 ரூபாய் மதிப்புடைய சர்கார் டிக்கெட்டை பிளாக்கில் ரூ.1000க்கு விற்பனை செய்ய வைத்து நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், சன்பிக்சர்ஸ் ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.


கோவையில் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவிற்கு முதல் துரோகி டிடிவி தினகரன் தான். தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது , அது மதவாதக் கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா? பாலாறு தடுப்பணை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா? தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது ஏன்?

   மடியில் கனம் இல்லை என்றால் தைரியமாக வழக்கை எதிர்கொள்ள வேண்டியது தானே? தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம். கமலுக்கு 64 வயது ஆகிவிட்டதால் சினிமாவில் நடிக்க முடியாமல் அரசியலில் நடிக்க வருகிறார். இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயக படுகொலைக்கு சமம். சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது; மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம்.

கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி அந்த பணம் வந்தது? ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். இலவசம் வேண்டாம் என்றால் கல்வியும் விலை இல்லாமல் தான் தருகிறோம் அதனால் படிக்காமல் இருந்து விட முடியுமா? சர்கார் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களின் உறவினர்கள் கூட அரசின் விலையில்லா பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

   கமலுக்கு இப்போது 64 வயதாகிவிட்டது. சினிமாவில் கமலுக்கு வாய்ப்பு இல்லை. சினிமாவில் இனி நடிக்க முடியாது என்பதால் அரசியலில் கமல் நடித்து வருகிறார். இவ்வாறு அந்த பேட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.