பள்ளிகளை மூடி வைப்போம்! நோய் தொற்றாமல் குழந்தைகளை பாதுகாப்போம்! ஒரு உஷார் ரிப்போர்ட்!

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.


குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் தண்ணீர் இல்லை. குடிப்பதற்கு வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டுவரச் சொல்கிறார்கள். அதுசரி, பாத்ரூம்களில் தண்ணீருக்கு என்ன செய்வது? இப்போது பல பள்ளிகளில் தண்ணீர் இல்லை, கழிப்பிடங்களை குழந்தைகளோ, ஆசியர்களோ  பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு போட்டுள்ளனர்.

இன்னொன்று பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் குடிக்கவும் கட்டுப்பாடு உள்ளது. வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் தண்ணீர் காலியாகிவிட்டால், மீண்டும் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல்  பெரும்பாலான குழந்தைகள் வெப்பத்தால் குதங்குகிறார்கள்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் குழந்தைகள் மருத்துவர், ‘‘பாத்ரூம்களில் போதிய தண்ணீர் வசதி செய்து தரவில்லை என்றால், குழந்தைகளுக்கு கடுமையான தொற்று நோய் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொள்வதுதான் நல்லது’’ என்கிறார். தண்ணீர் இல்லையென்றால் பள்ளியை மூடுங்கள் செங்கோட்டையரே...