விஷாலை ஒழிச்சிகட்டுங்க! எடப்பாடி போட்ட உத்தரவு!

நடிகர் சங்கத்தில் அரசியல் எட்டிப்பார்த்ததே இல்லை.


முதல்வராக எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சினிமா பிரபலங்கள்  இருந்தபோதும், நடிகர் சங்கத்தில் அரசியலை அவர்கள் நுழைய விட்டதே இல்லை. ஆனால், இந்த தேர்தல்  முழுக்க முழுக்க அரசியல் அணியாக மாறிவிட்டது.

விஷால் அணிக்கு முழுக்கவும் தி.மு.க. ஆதரவு இருக்கிறது. அதேபோல் ஐசரி கணேஷ் அணிக்கு அப்பட்டமாக அ.தி.மு.க. ஆதரவு கிடைத்திருக்கிறது இப்போது ராதாரவி அ.தி.மு.கவில் சேர்ந்ததற்கு காரணமும் இதுதானாம். இப்போது ராதாரவி கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு, நாடக நடிகர்கள் ஓட்டுக்களை விலைக்கு வாங்க அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த வகையில் ஏகமாக செலவு செய்கிறது அ.தி.மு.க. அதனாலே சினிமாவுக்கு திடீர் அறிமுகமாக உள்ள ஐசரி கணேஷை களம் இறக்கியிருக்கிறார்கள். கிளீன் இமேஜ் வேண்டும் என்பதற்காக பாக்கியராஜை தலைவர் பதவிக்குப் போட்டியிட வைத்திருக்கிறார்கள். இதற்காக பாக்கியராஜ்க்கு ஒரு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாம்.

தொலைக்காட்சிகளில் கேம் ஷோ போன்று ஒவ்வொரு பதவிக்கு நிற்பவர்களுக்கும் ஒரு தொகை கொடுத்துதான் நிறுத்தியிருக்கிறார் ஐசரி கணேஷ். அரசியலில் தோற்றுவிட்டோம், எப்படியாவது இந்தத் தேர்தலில் ஜெயித்தே தீரவேண்டும் என்று ஐசரிகணேஷ்க்கு உற்சாகம் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடி.

விஷாலுக்கு ஊக்கம் தரவேண்டிய ஸ்டாலின் ஊரைவிட்டே ஓடிப்போனதால், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாது விஷால் அணி.