இந்திய குடியுரிமை சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, இந்த இரண்டும், உலகின் எல்லா தேசங்களின் பாதுகாப்புக்கும், அவசியமானவை.
குடியுரிமைச் சட்டம், குடியுரிமை பதிவேடு இரண்டும் மிகவும் முக்கியம்..! முஸ்லீமாக இருந்தாலும் மோடி அரசுக்கு ராஜ்கிரண் ஆதரவு!
நம் தேசத்துக்கும் நிச்சயமாக தேவை. இவைகளில் செய்யப்படும் திருத்தங்களும், மாறுதல்களும் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சட்டங்களை செயல்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள், அந்தப்பரிசீலனைகளை முழுமையாக செய்து முடித்து, எப்படி, அதை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று தெளிவான பிறகு,
அதில் நமக்கு ஐயங்கள் இருந்தால், நம்மால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நம் கருத்துக்களை பதிய வைக்கலாம். நம் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால், ஒவ்வொரு குடிமகனுக்கும் உச்ச நீதி மன்றத்தை அணுகி நியாயம் கேட்க உரிமை இருக்கிறது. இது தான் சட்டப்பூர்வமான வழி.
இதைத்தவிர்த்து, எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறார்கள் என்று தெரிவதற்கு முன்பே, பலவிதமான கருத்துக்களை உருவாக்கி, மக்களிடையே பதட்டங்களை ஏற்படுத்துவதென்பது, நல்ல விளைவுகளை உண்டாக்காது என்பது, என் தாழ்மையான கருத்து. பதறிய காரியம் சிதறும் என்பது பழமொழி.
எதிலும் நிதானம் அவசியம். பொறுமையைவிடச்சிறந்தது எதுவுமில்லை. நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.