நவரத்தின கற்களை லாவகமாக திருடி வான்டடாக போலீஸ் வண்டியில் ஏறிய விநோத திருடன்!

சினிமா பானியில் காவல் துறை வாகனத்தை பார்த்து தன்னை பிடிக்க வந்ததாக பயந்து ஓட்டம்ப்பிடித்த திருடன், லாவகமாக பிடித்த காவல்துறை.


தேனியை சேர்ந்த செல்வம் விலை உயர்ந்த நவரத்தின கற்கள் வியாபாரம் செய்துவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனக்கு செல்வத்துடன் போனில் தொடர்புகொண்டு நவரத்தினகல் விற்பனைக்கு ஆர்டர் கொடுத்தவர், சென்னையில் தான் வாடிக்கையாளர் ஒருப்பதால் நேரடியாக அங்கு சந்திக்க அழைக்கிறார்.

இதனை நம்பி சென்னைக்கு வந்த  செல்வம் , தி.நகரில் பிரபல விடுதியில் தங்கியிருந்தார், அவரை தனது நண்பர்களுடன் பார்க்க சென்ற பாஸ்கர், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவரத்தின கல்லை இரண்டரை இலட்சம் வரை பேரசம் பேசி குறைத்துள்ளார். இதற்கிடையில் கழிவறைக்கு சென்ற செல்வம் திரும்பி வந்து பார்த்து போது பாஸ்கர் மற்றும்.அவரது கூட்டாளிகள் நவரத்தின கல்லை திருடி சென்றது அறிந்து அதிர்ந்து போனார்.

இந்த நிலையில் தப்பியோடிய பாஸ்கர் தி.நகர் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த போது அந்தப்பக்கம் எதேர்ச்சியாக ரோந்து வந்த காவல்துறை வாகனத்தை கண்டு அலறி அடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்துள்ளார். சந்தேகம் அடைந்த காவல் துறையினர் பாஸ்கரை துரத்தி பிடிக்க, பாஸ்கர் என்னை விட்டு விடுங்க , நவரத்தினக் கல்லை நானே கொடுத்துறன்னு வாக்கு மூலம் கொடுக்க, அசந்து போனது காவல்துறை.

சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு அவரிடம் இருந்த நவரத்தின கல்லை பறிமுதல் செய்து, பின்னர் பாஸ்கர் கூட்டாளிகளை குறித்து விசாரணை நடத்தி வருகிறது. சினிமா பாணியில் சிவனேன்னு போன போலீசீடம் வலிய சென்று மாட்டிக்கொண்ட திருடன் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.