கழுத்தில் குத்தப்பட்டிருந்த சிலுவை! ரத்த வெள்ளத்தில் பாதிரியார் சடலம்! தந்தை - மகனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தவருக்கு நேர்ந்த பயங்கரம்

பாரிஸ்: கழுத்தில் சிலுவை குத்திய நிலையில் பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்ஸ் நாட்டின் வடக்கே உள்ள Agnetz என்ற பகுதியை சேர்ந்த ரோஜர் மடசோலி (91 வயது), சமீபத்தில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது கழுத்தில் சிலுவை குத்திய நிலையில், உடல் முழுக்க ரத்த காயங்கள் காணப்பட்டன. பாதிரியாராக இருந்து வந்த மடசோலி இவ்வாறு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாதிரியாரின் வீட்டில் பணிபுரிந்து வந்த அலெக்சாண்டர் என்ற 19 வயது இளைஞனை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.  

அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம். பாதிரியார் மடசோலியின் வீட்டில், அலெக்சாண்டரின் குடும்பம், தலைமுறை தலைமுறையாக பணிபுரிந்து வருகின்றனராம். இதன்படி, அலெக்சாண்டரின் தாத்தா, மடசோலியிடம் பணிபுரிந்திருக்கிறார். அவரை தொடர்ந்து அலெக்சாண்டரின் அப்பா, மடசோலியிடம் பணிபுரிந்தாராம். அப்போது, அவரை பாதிரியார் மடசோலி, பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அலெக்சாண்டரின் தந்தை தனது தந்தையிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், விசயத்தை கேள்விப்பட்ட அலெக்சாண்டரின் தாத்தா தற்கொலை செய்துகொண்டாராம். பிறகு, 2000ம் ஆண்டில் அலெக்சாண்டர் பிறந்ததும், பாதிரியார் வீட்டில் வேலைக்கு அவரது தந்தை அனுப்பி வைத்துள்ளார்.  

ஆனால், அலெக்சாண்டரையும் சிறு வயது முதலே மடசோலி பாலியல் வன்புணர்வு செய்து வந்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த அலெக்சாண்டர் பாதிரியார் கதையை முடிக்க திட்டமிட்டார். இதன்படி, வீட்டில் தனியாக இருந்த பாதிரியாரை அடித்து உதைத்து சித்ரவதை செய்து பிறகு சிலுவையில் குத்திக் கொன்றுள்ளார். இந்த சம்பவங்கள் கடந்த 1960 முதல் நடைபெற்ற குடும்பக் கதை என்பதால், போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

கடந்த 50 ஆண்டுகளாக, ஒரு குடும்பத்திற்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் மரணத்திற்கு துக்கம் அனுசரிப்பதா அல்லது அவரை ஒருவழியாக பழி தீர்த்த இளைஞனை பாராட்டுவதா என தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த விசித்திரமான குற்ற சம்பவங்களில் இதுவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.