கிறிஸ்தவ பெண்களை காதலித்து தீவிரவாதிகளாக்குகின்றனர் முஸ்லீம் இளைஞர்கள்! கத்தோலிக்க தேவாலயதில் படிக்கப்பட்ட பரபர அறிக்கை!

எர்ணாகுளம்: வெளிப்படையாக லவ் ஜிஹாத் கண்டன அறிக்கையை சைரோ மலபார் தேவாலய நிர்வாகம் வாசித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பெண்களை, இஸ்லாமிய ஆண்கள் காதல் என்ற பெயரில் கடத்திச்சென்று  ஐஎஸ் இயக்கத்தில் சேர்த்துவிடுவதாகப் புகார் கூறப்படுகிறது. இதற்கு லவ் ஜிஹாத் என இஸ்லாமியர்கள் பெயரிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் சைரோ மலபார் சர்ச் தனது நிர்வாகத்திற்கு உள்பட்ட கிறித்துவர்களை எச்சரிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அத்துடன், இந்த லவ் ஜிஹாத் பற்றி வெளிப்படையாகவே பலமுறை சைரோ மலபார் சர்ச் புகார் கூறியும் வருகிறது. இதன்பேரில் சைரோ மலபார் சர்ச்களின் தலைமையிடமான எர்ணாகுளத்தில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறன்று வெளிப்படையாகவே  தலைமை பாதிரியார் லவ் ஜிஹாத் பற்றிய கண்டன அறிக்கையை வாசித்தார்.

அந்த அறிக்கையில்,''இது சமூக நல்லிணக்கத்தை பாதிப்பதாக உள்ளது, இந்த சதித்திட்டம் பற்றி உடனடியாக அரசு நிர்வாகம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பெண்கள், சிறுமிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என்றும் சைரோ மலபார் சர்ச் தலைமை வலியுறுத்தியுள்ளது.