அப்ரிடியின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்!

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தானின் அப்ரிடி சாதனையை முறியடித்துள்ளார்.


கிறிஸ் கெய்ல் இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 135 ரன்களை குவித்தார். இதில் 12 சிக்ஸர்கள் அடங்கும். இதனால் சர்வதேச போட்டிகளில் இதுவரை கெய்ல் 477 சிக்ஸர்களை அடித்து பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

 இதன் மூலம் 476 சிக்ஸர்கள் அடித்த அப்ரிடி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.நியூஸிலாந்து அணியின் பிரண்டன் மெக்கல்லம் 398 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக மூன்றாவது இடத்தில்  உள்ளார்.

இலங்கை அணியின் ஜெயசூரியா 352 சிக்ஸர்களுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.இந்திய அணியின் டோனி மற்றும் ரோஹித் சர்மா முறையே 5 மற்றும் 6வது இடத்தில் உள்ளனர்.

அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கிறிஸ் கெய்ல் ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் களமிறங்கி முதல் போட்டியிலே சதம் அடித்து விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.