ஒரே ஒரு சாக்லேட்டுக்கு ஆசைப்பட்ட சிறுமி! 2 வெறி பிடித்த இளைஞர்கள் செய்த கொடூர செயல்!

மும்பை: சாக்லேட்டுக்கு ஆசைப்பட்ட சிறுமி, பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை புறநகரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 4வயதாகும் அந்த சிறுமியின் பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், ராஜிவ் குமார் சிங் (26), ரஜ்னி குமார் சிங் (19) என்ற இருவரும் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி, சிறுமியை தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். 

பின்னர், உடல் முழுவதும் கைகளால் சீண்டிய அவர்கள், திடீரென காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, சாக்லேட்டை கையில் கொடுத்துள்ளனர். 

இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறவே, அதிர்ந்துபோன அவர்கள் உடனடியாக, போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப் பதிந்து, 2 பேரையும் கைது செய்துள்ளனர்.