திருமணமாகி ஒரே மாதம்! நடு வீட்டில் சடலமாக தொங்கிய ஈரோடு மீனா! அதிர்ச்சியில் உறைந்த என்ஜினியர் கணவன்!

சென்னை: திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், சென்னை சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு,  கடந்த நவம்பர் மாதம் ஈரோட்டைச் சேர்ந்த மீனா என்பவருடன் திருமணமானது. புதுமண தம்பதி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம்பெயர்ந்தனர்.

இல்லற வாழ்வு தொடங்கிய மகிழ்ச்சியில், ராமலிங்கம் வேலைக்குச் சென்றுவிட்டு, நேற்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு, மீனா தற்கொலை செய்துகொண்ட விவரம் தெரியவந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் பற்றி விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.