நான் தான் நம்பர் ஒன்! அகில இந்திய அளவில் சாதித்த புதுக்கோட்டை ஏழை தமிழச்சி! எப்படி தெரியுமா?

சித்தா முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வில் தேசிய அளவில் முதலிடத்தை பெற்று தமிழகத்தை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கூனுரைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் பொன்மணி சென்ற 2013ம் ஆண்டு அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று 1200க்கு 1062 மதிப்பெண்கள் எடுத்து பொது தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து MBBS படிப்பு பயில நினைத்த இவருக்கு அதில் சீட்டு கிடைக்காத காரணத்தினால் இளநிலை சித்தா மருத்துவ படிப்பை படித்து வந்தார். 

அதில், இளநிலை படிப்பை முடித்தபின் மத்திய அரசு தேசிய மருத்துவ முதுநிலை கல்விக்கான தேர்வை எழுதினார். அதன்பின் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வையும் எழுதி அதில் தேசிய அளவில் முதலிடத்தை பெற்றார். எம்பிபிஎஸ் கனவை மனதில் வைத்துக் கொண்டு படித்ததால் 400க்கு 377 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். 

இது குறித்து பேசிய மாணவி, இந்த தருணம் எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றும், மேற்படிப்புக்காக சென்னை தேசிய சித்த ஆராய்ச்சி மையத்தில் பயில இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.