சீனாவில் இறந்த தனது காதலியின் இறுதி ஊர்வலத்தில் காதலியின் ஆசைப்படி அவரது சடலத்திற்கு தாலி கட்டிய காதலன். இச்சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காதலி திடீர் மரணம்! சடலத்துக்கு மோதிரம் மாற்றி மனைவியாக்கிய காதலன்! கண் கலங்க வைக்கும் நிகழ்வு!
சீனாவைச் சேர்ந்த சூ ஷினன் 35, என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்னர் இணையதளத்தின் மூலம் யாங் என்பவர் நண்பர் ஆகியுள்ளார். இந்நிலையில் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி பின்னர் நாளடைவில் அவர்கள் நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் ஆகஸ்ட் 2013 ஆண்டு திருமணம் செய்து கொள்ளப்போவதாக முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து யாங் மூன்று மாதங்கள் கழித்து கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் வலி இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து மருத்துவமனை சென்று பரிசோதித்த போது அவருக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.
அந்தக்கணமே அவர்களது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது புற்று நோய்க்கான சிகிச்சையை யாங் தொடர்ந்து வந்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு 2017 ஆம் ஆண்டு அவரது உடல்நிலை மேம்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காகவும் தங்களுக்கு என தனி வீடு வாங்குவதற்கு முன் தங்களது பணத்தை சேமிக்க தொடங்கியுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல இருவரும் தங்களது காதல் கனவுகளுடன் வாழ்க்கையை கடக்க தொடங்கினார்.
பின்னர் துரதிஸ்டவசமாக ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் புற்றுநோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. திரும்பவும் அதே பகுதியில் புற்றுநோய் ஏற்பட்ட பிறகும் உயர் சிகிச்சைக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் யாங் தனது 34 வயதில் மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து தனது காதலி இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத சூ தொடர்ந்து 7 நாட்கள் அவரது சடலத்தின் அருகிலேயே அமர்ந்து துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் மணப்பெண்ணாக வேண்டும் என்ற தனது காதலியின் ஆசைப்படி அவரது இறந்த உடலுக்கு தாலி கட்டியுள்ளார்.யாங்கிற்கு வெள்ளை திருமண உடை அணிவித்து 169 இளஞ்சிவப்பு பூக்களை சுற்றிலும் வைத்து திருமணம் நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறது அவருடைய உடல் இறுதி சடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் இச்சம்பம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.