குட்டிக் குழந்தையை எட்டி உதைத்த சைகோ ..! போலீஸ் தீவிர வேட்டை!

சீனாவில் பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தையை எட்டி உதைத்த கயவனை போலீசார் தேடி வருகின்றனர்.


சீனாவின் ஷென்சென் மாகாணத்தில் உள்ள நகரம் ஒன்றில் பாட்டி ஒருவர் தன்னுடைய ஒரு வயது பேத்தியை ஸிங்செங் ஷாப்பிங் மாலிற்கு அழைத்து சென்று இருந்தார். அப்போது அங்கு குழந்தை தரையில் உலாவிக் கொண்டிருந்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதை பாட்டி ரசித்துக் கொண்டிருந்தபோது அப்போது அந்த வழியே வந்த கயவன் ஒருவன் குழந்தை எனும் பாராமல் எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டு சென்று விட்டான்.

இந்தக் காட்சிகள் அந்த வணிக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. உடனடியாக குழந்தையை தூக்கிய பாட்டி அவனை கடுமையாக எச்சரித்தார். ஆனாலும் அதை பொருட்படுத்தாத அந்த நபர் பாட்டியையே மிரட்டி விட்டு சென்றுள்ளான். இது குறித்து பாட்டி அளித்த தகவலில் குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  

கயவன் காலால் உதைத்ததில் குழந்தை லேசான காயம் அடைந்தது. குழந்தையை எட்டி உதைத்த நகரை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என ஷென்ஸென் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அங்கு உள்ளவர்கள் தெரிவித்தபோது அவனைப் போன்ற சைகோக்கள் நிறைய சுற்றுவதாகவும் அவர்களுக்கு மனிதாபிமானம் என்ன வென்று தெரியாத முட்டாளாக உள்ளார்கள் எனவும் தெரிவித்தனர்.

சீனாவில் குழந்தையை எட்டி உதைத்தது பெரிய விஷயமா நம்மூரில் நடக்க வில்லையா என்றெல்லாம் கேட்கவேண்டாம். சீனாவில் நடக்கும் சம்பவங்கள் நம்மூருக்கு அடுத்த நிமிடத்தில் தெரிந்து விடும் அளவிற்கு வளர்ந்த தொழில் நுட்பம் உசிலம்பட்டியில் நடக்கும் சம்பவங்கள் சென்னையை வந்து சேர 3 நாட்கள் ஆகிவிடுகிறது. காரணம் தொழில்நுட்பம் அல்ல. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மனிதர்கள்தான்.