ராதாரவி செய்த விவகாரமான சம்பவம்! கதறி அழுத சின்மயி! நீதிமன்றத்தில் பரபரப்பு!

சென்னை: டப்பிங் பேச சின்மயிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கான இடைக்கால நீட்டிப்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


சினிமா பாடகியான சின்மயி, திரைப்படங்களில் டப்பிங் பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், சினிமா உலகில் நடைபெற்று வரும் பாலியல் சுரண்டல் பற்றி, அவர் சமூக ஊடகங்களில் காரசாரமான தகவல்கள் பலவற்றை #MeToo என்ற பெயரில் வெளியிட்டார். இதன்பேரில், அவருக்கு டப்பிங் பேசுவதற்கு, டப்பிங் யூனியன் தடை விதித்து, கடந்த ஆண்டு உத்தரவிட்டது. 

ஆனால், இதற்கு சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்து, சின்மயி இடைக்கால தடை வாங்கியுள்ளார். அந்த தடையை தற்போது இந்த இடைக்கால தடையை மேலும் சில மாதங்களுக்கு, அதாவது ஜூன் 6ம் தேதி வரை சிவில் நீதிமன்றம் நீட்டிப்பு செய்துள்ளது. இதுபற்றிய வழக்கு விசாரணையின்போது, சின்மயி தனது இளமைக்காலம் முதலே டப்பிங் பேசிவருவதாகவும், பாலியல் புகார் சொன்ன காரணத்திற்காக, தனக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் சிலர் சதி செய்வதாகவும் குறிப்பிட்டார். 

குறிப்பாக, ராதாரவி மற்றும் வைரமுத்துவுக்கு எதிராக தான் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்தே, அவர்களின் தலையீட்டின் பேரில், தனக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் எதுவும் கிடைக்காமல் சிலர் தடுத்து வைப்பதாகவும், சின்மயி சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கீடு செய்த ராதாரவியின் வழக்கறிஞர், சின்மயி தனக்கு பல மொழிகள் தெரியும் என்று  சொல்லி எல்லோரையும் ஏமாற்றுவதாகக் குறிப்பிட்டார். இது தவிர, சின்மயி பேசுவதை நீதிமன்றம் நம்பக்கூடாது எனவும், அவர் நடத்தை கெட்டவர் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதற்குப் பதில் அளித்த சின்மயி, ''ஒரு வழக்கறிஞர் என் நடத்தை பற்றி முறைகேடான கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. நீதிமன்றத்திலேயே இவ்வாறு அவர் பேசுவதை, நீதிபதி கண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார். இதனால், நீதிமன்றத்தில் சில மணிநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.