சின்மயி கூறிய அதிரடி புகார்! பதறிக் கொண்டு ஓடி வந்த எம்.எல்.ஏ!

சின்மயி புகார் குறித்து உடனே நடவடிக்கை எடுத்த மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜூக்கு பாராட்டுகள் குவிகின்றன.


பாடகி சின்மயி அளித்த புகாரின்பேரில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ நடராஜ் உடனடி நடவடிக்கை எடுத்து, வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

இதுபற்றி, பாடகி சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ நடராஜ் உண்மையில் மிக நல்லவர். அவரிடம் மயிலாப்பூர் குடியிருப்பு பகுதி ஒன்றில் அமைந்துள்ள வேகத்தடை பற்றியும், அதனால் ஏற்படும் விபத்துகள் பற்றியும் கூறியிருந்தேன்.

அதன் படி புகார் மனு ஒன்றையும் வழங்கியிருந்தேன். இதன் பேரில்  உடனடியாக நடவடிக்கை எடுத்த அவர், வேகத்தடையை அப்புறப்படுத்தியும் நடவடிக்கை எடுத்து உள்ளார். இதற்காக, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்று தெரிவித்துள்ளார். 

சின்மயி பாராட்டும் அந்த அதிமுக எம்எல்ஏ வேறு யாருமில்ல, முன்னாள் போலீஸ் அதிகாரி நடராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக சின்மயி புகார் என்றாலே விவகாரமானதாகவே இருக்கும்.

ஆனால் இந்த முறை சின்மயி கூறியுள்ள புகார் பொதுமக்கள் நலன் சார்ந்ததாகவும்.