தூங்கியபடியே காரை ஓட்டிய டிரைவர்! பிறகு நேர்ந்த விபரீதம்! காண்போரை பதறவைக்கும் வீடியோ!

சீனாவில் கன நேரம் கண் அசந்த நபரால் நேர்ந்த விபரீதம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.


சீனா நாட்டில் வேகமாக வந்த கார் மற்றொரு காரின் மீது மோத பயணிகள் மூவரும்க்  காரின் முன்பக்க  கண்ணாடியில் மோதி படுகாயமடையும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

அந்த வீடியோவில் காரினை இயக்கி வரும் டிரைவர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கி வர, நீண்ட நேரமாக போராடியும் திடீரென கண் அசந்த அந்த டிரைவர் எதிரில் வந்த வாகனத்தின் மீது மோத ,

காரின் பின்புறமாக அமர்ந்திருந்த இரு மாணவிகாலும் சீட் பெல்ட் போட தவறியதால் , வாகனம் மோதிய வேகத்தில் எதிரே இருந்த் கார் கண்ணாடி யின் மீது மோது படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து படுகாயம் அடைந்த அந்த டிரைவர் உள்ளிட்ட மூவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.டிரைவர் சிறிது நேரம் காரை ஓரம்கட்டி ஓய்வு எடுத்திருந்தாலோ ? அல்லது சீட் பெல் அணிந்திருந்தாலோ இந்த விபத்து தவிர்க்க பட்டிருக்கலாம என கூறப்படுகிறது.

மேலும் தூக்க கலக்கத்தில் டிரைவர் வாகனத்தை இயக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.