காஷ்மீரில் சீனா திடீர் மெளனம்! காரணம் தெரியுமா?

மோடி அன்கோவின் காஷ்மீர் அதிரடி அறிவிப்பு வந்தவுடன் பாக்கிஸ்தானின் சீனாவின் ரியாக்‌ஷனுக்காகக் காத்திருந்தது.


தாலிபான்களுக்கும் அமெரிக்காவும் சமாதானமாகி , ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறப் போகிறது.சொறி பிடித்த கையும் துப்பாக்கி பிடித்த கையும் சும்மா இருக்காதல்லவா,அதனால் சீனா லேசாகக் கண்காட்டினால் அவர்களை காஷ்மீருக்குள் ஏவலாம் என்று திட்டமிட்டது பாக்கிஸ்தான்.

ஆனால்,சீனாவோ , மற்ற நாடுகளின் இறையான்மையை மதிப்போம் என்று ஞாயம் பேசியது.லடாக் எல்லை பிரட்சினையைத் தவிர வேறு எதைபற்றியும் கருத்து தெரிவித்ததன் மூலம்,தான் காஷ்மீரைக் கண்டுகொள்ள போவதில்லை என்று இந்தியாவுக்கு ஒரு மறைமுகமான பச்சைக் கொடியை காட்டியது சீனா!

மொத்த உலகுக்குமே இது அதிசயமாகத்தான் தெரிந்தது முதலில்.ஆனால்,ஹாங்காங்கில் தேள் கொட்டியதால் பீஜிங்கில் நெரிகட்டியது லேசாகத்தான் உலகத்துக்குப் புரிந்தது.ஹாங்காங் அதிகாரப் பூர்வமாக சீனாவின் ஒரு பகுதிதான் என்றாலும்,அங்கு சட்டம்,நீதி நிர்வாகம் எல்லாம் பழைய பிரிட்டிஷ் பாணியிலேயே தொடர்கிறது.

சீனத்தில் குற்றச் செயலில் ஈடுபடுவோர் ஹாங்காங் மாநிலத்துக்குத் தப்பிச் செல்வதையும்,ஹாங்காங்கில் தண்டிக்கப்படும் கைதிகள் மற்ற சீனக் கைதிகளைப் போல நடத்தப்படாமல் 'சொகுசாக' இருப்பதையும் தடுக்க விரும்புகிறது சீனா.அதனால்,ஹாங்காங்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துப் போய் தனது ஸ்டைலில் விசாரித்து அடைத்து வைக்க விரும்புகிறது.

அதை ஹாங்காங் மக்கள் ஒப்புக்கொள்ள மறுத்து போராடி வருகிறார்கள்.மேற்கில் லண்டன் விமான நிலையத்திற்கு இணையாக பிஸியாக இருக்கும் ஹாங்காங் விமான நிலையம் இந்தப் போராட்டத்தால் முடங்கிப் போய்விட்டது.சிங்கப்பூர்,மலேசியா,ஆஸ்த்திரேலியா,நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு போகும் பயணிகளின் கேந்திரமான  ஹாங்காங்கில் நடக்கும் இந்தப் போராட்டத்தால் நேற்று மட்டும் நூற்றுக்கணக்கான விமான சர்வீஸ்கள் கேன்சல் செய்யப்பட்டு இருக்கின்றன.

இதை இப்போது உலகமே உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கையில் தான் தலையிட்டால் , இந்தியாவும் ஹாங்காங் பிரட்சினையில் மூக்கை நுழைக்கும் என்று சீனா நினைக்கிறது.அதனால்தான் சீனா இப்படி மெளனம் காக்கிறது என்பது புரிந்ததும் டெல்லி உற்சாகமாகி விட்டது. இஸ்லாமாபாத் குழம்பிப் போய் நிற்கிறது.