இந்திய பயணம்! தமிழகத்தை அதுவும் மாமல்லபுரத்தை ஜின்பிங் தேர்வு செய்தது ஏன்? அசர வைக்கும் காரணம்!

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்திற்கு பச்சைக்கொடி காட்டிய சீன அதிபர் ஜின்பிங் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28-ந் தேதி இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் முதன்முதலாக முறைசாரா உச்சிமாநாடு என்ற பெயரில் சீனாவின் வூகன் நகரில் சந்தித்து பேசினர். பிரதமர் மோடியும், அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு நமது மாமல்லபுரத்தில் நடக்கிறது.

வெளிநாட்டுத்தலைவர்கள் இந்திய பயணம் மேற்கொண்டலால், அவர்கள் டெல்லியில், பிரதமரையும், ஜனாதிபதியையும், வெளியுறவு மந்திரி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசுவதுதான் காலம் காலமாக மரபாக இருந்து வந்தது. ஆனால் பிரதமராக முதல் முறை மோடி பதவி ஏற்ற பின்னர் இதில் அவர் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். 

உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில், இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருநாட்டு சந்திப்பு வரலாற்றுபிண்ணனி கொண்ட தமிழகத்தில் அமைந்துள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளனர்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட இரு முன்னணி நாடுகளான இந்தியா மற்றும் சீனாவின் அதிபர் சந்திப்பை குறித்து உலக நாடுகள் அனைவரும் உற்று நோக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வினை அக்டோபர் 11ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி இந்தியாவின் பிரதமர் மோடியும், சீனாவின் அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசப்போகிறார்கள்.

உலக நாடுகள் உற்று நோக்கும் இந்த நிகழ்வு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு இருநாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடமும் மிக முக்கிய அம்சமாக தான் இருக்க வேண்டும், அதன் காரணமாக தான் மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளனர்கள்.

மாமல்லபுரத்தின் வரலாற்றுப்பெருமை, கலாசார பெருமையை அவர் அறிந்து கொள்ளும் வகையில். வெளிநாட்டு தலைவர்களின் வருகையால், அவர்கள் வரக்கூடிய நகரங்கள் புத்துயிரூட்டப்படுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தலைவர்கள். 

 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியா வந்தபோது, அவருடனான சந்திப்பை பெங்களூருவில் நடத்தினார்.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தபோது ஆமதாபாத்தில்தான் அவருடனான சந்திப்பை பிரதமர் மோடி வைத்துக்கொண்டார்.

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே வந்தபோது, ஆமதாபாத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வந்தபோது, அவருடனான சந்திப்பை பிரதமர் மோடி வாரணாசியில் நடத்தினார்.

இப்போது அந்த வரிசையில்தான் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி 2-வது முறைசாரா உச்சிமாநாட்டை மாமல்லபுரத்தில் நடத்த முடிவானது. 1984-ம் ஆண்டு உலக பாரம்பரிய இடத்தின் பட்டியலில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பல சிறப்புகளை கொண்ட பல்லவ சாம்ராஜ்யத்தில் 7-ம் நூற்றாண்டிலும், 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடைவரை கோவில்களும், கடற்கரை கோவில்களும், ரதங்களும், நினைவுச்சின்னங்கள் இன்றைக்கும் அவை, அவற்றுக்கே உரித்தான கம்பீரத்துடன் நின்று கொண்டிருக்கின்றன.

இத்தனை சிறப்புமிக்க மாமல்லபுரம், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையால் இன்னும் பிரபலம் ஆகும். அந்த வகையில் தமிழர்களின் நாகரிகமும், கலாசாரமும், பண்பாடும் உலகமெங்கும் பரவுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.