நகரும் படிக்கட்டுல ஏறப்போறீங்களா? ஜாக்கிரதை! இந்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரத்தை கேளுங்க!

சீனாவில் எஸ்கலேட்டரை பயன்படுத்திய மூதாட்டி ஒருவரின் கால் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


சீனாவின் ஹார்பின் மாகாணத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு சென்ற அந்த மூதாட்டி அங்கிருந்த எஸ்கலேட்டரை பயன்படுத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த எஸ்கலேட்டரின் நகரும் படிகள் உடைந்து விழுந்ததை அடுத்து அதில் அவர் சிக்கிக் கொண்டார். 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவசர ஸ்விட்சை அணைத்து எஸ்கலேட்டரை நிறுத்திய போதும், மூதாட்டி எஸ்கலேட்டர் எந்திரத்தின் பிடியில் வலுவாக சிக்கிக் கொண்டதால் அவரை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் அரை மணி நேரம் போராடி மூதாட்டியை மீட்டனர். எனினும் அவரது காலை காப்பாற்ற முடியவில்லை முழங்கால் வரை துண்டான நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எஸ்கலேட்டர் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தும் அதனை மூதாட்டி கவனிக்காமல் விபத்தில் சிக்கியதாக வணிக வளாக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் வணிக வளாகத்தின் கவனக் குறைவான பராமரிப்பே மூதாட்டியின் நிலைக்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.