அமெரிக்க இராணுவம்தான் கரோனாவுக்கு காரணம் - சீன அதிகாரி அதிரடிக் குற்றச்சாட்டு

உலகையே பயமுறுத்திவரும் கரோனா வைரசு தாக்கத்தின் தொடக்க பாதிப்பு சீனத்தில்தான் எனும் நிலையில், அமெரிக்க இராணுவம் மூலமாகவே கரோனா பரவியிருக்கும் என சீன வெளியுறுவுத் துறை அதிகாரி ஒருவர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சீனத்தின் வுகான் மாநிலத்தில் கரோனா வைரசின் தாக்குதல் முதலில் கண்டறியப்பட்டு, அந்த நகரமே தனிமைப்படுத்தப்பட்டு, இப்போது பிரச்னை சீர்செய்யப்பட்டு அந்நாட்டு அதிபர் ஜிஜின்பிங் அங்கு பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு வழமை திரும்பிவருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 27-ம் தேதி அன்று அந்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜோங் நசான், “கோவிட் - 19 காய்ச்சலானது சீனத்தில் முதலில் கண்டறியப்பட்டது என்பதாலேயே, அது இங்குதான் தோன்றியது என்று கூறமுடியாது.” என்று முதலில் கருத்துத் தெரிவித்தார். அதை சீன அரசு ஊடகங்களும் வழிமொழிந்தன.

அதைத் தொடர்ந்து, சீன வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வப் பேச்சாளரான லிஜியான் ஜோகான் வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் இது பற்றி கருத்திட்டுள்ளார். அதில், “ வூகான் மாநிலத்துக்கு கரோனா கொள்ளைநோயைக் கொண்டுவந்தது அமெரிக்க இராணுவமாக இருக்கலாம். அமெரிக்க அரசாங்கம் தங்கள் நாட்டில் கரோனா தாக்கம் பற்றி வெளிப்படையாக இருக்கவேண்டும். அவர்களின் விவரங்களை பொதுவெளியில் வைக்கவேண்டும். இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா விளக்கமளிக்க வேண்டும்” என்று ஜோகான் குறிப்பிட்டுள்ளார்.

சீனத்தில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்திலிருந்து உயிரியல் ஆயுதமாக இது முதலில் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு என ஐரோப்பிய, அமெரிக்க ஊடகங்களும் பின்னர் அமெரிக்க அதிகாரிகள் பலரும் கருத்துகளைக் கூறிவருகின்றனர். யார் ஒருவரும் அதற்கான சான்றுகளை முன்வைக்காமல் கருத்துகளை மட்டும் தெரிவித்துவரும் நிலையில், சீனத் தரப்பிலிருந்து பதிலடிக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.