ஒரு காலில் ஒன்பது விரல்கள்..! விநோத மனிதனின் விசித்திர பிரச்சனை..! டாக்டர்களே மிரண்ட உடல் அமைப்பு!

பீஜிங்: ஒரே காலில் 9 விரல்கள் இருந்ததை தொடர்ந்து சீன இளைஞர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.


சீனாவை சேர்ந்தவர் அஜூன். 21 வயதான இவருக்கு ஒரு விநோதமான உடல் வளர்ச்சி இருந்துள்ளது. ஆம், மற்றவரைப் போன்றில்லாமல் அஜூனின் இடது காலில் 5 விரல்களுக்குப் பதிலாக, 9 விரல்கள் இருந்துள்ளன. இதனாலேயே, வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்து வந்த அஜூன், காலில் செருப்பை அணிய முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார்.  

சக இளைஞர்களைப் போல காதலியுடன் டேட்டிங் செல்ல ஆசைப்பட்ட அஜூன் ஒருகட்டத்தில் தனது பிரச்னைக்குக் காரணமான 9 விரல்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளார். இதன்படி, தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப் படி தனது வாழ்வில் மிக முக்கியமான அறுவை சிகிச்சையை அஜூன் செய்துகொண்டிருக்கிறார்.

அவரது இடது காலில் உள்ள 9 விரல்களில் நான்கை அகற்றி, 5 விரல்களாக டாக்டர்கள் மாற்றியுள்ளனர். விரைவிலேயே தன்னம்பிக்கையுடன் வெளியில் நடமாடுவேன் என்றும், டேட்டிங் சென்று வாழ்க்கையை அனுபவிப்பேன் என்றும் அஜூன் குறிப்பிடுகிறார்.