2 கால்களும் இல்லாத நிலையிலும் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் பெண் டாக்டர்! நெகிழ வைக்கும் சம்பவம்!

சீனாவில், சிறுவயதிலேயே கால்களை இழந்த பெண் மருத்துவர், 17 வருடங்களாக ஏழை எளிய பிந்தங்கிய பகுதிகளில் மருத்துவ சேவையை செய்து வருவது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


சீனாவின் , சோன்கியூங் பகுதியை சேர்ந்தவர் லி- ஜுகோங்க், தனது 4 வயதிலேயே ஒரு விபத்தில் தன் இரு கால்களை இழந்தவர் எனினும் தொடர்ந்து தனது கடின உழைப்பினால் மருத்துவ படிப்பை முடித்தார். லீ பொறுத்தவரை தனக்கு மருத்துவம் சார்ந்த அனுபவம் உள்ளதால், எனக்கு கிடைத்த அன்பை தானும் திரும்ப செலுத்த விரும்புவதாக தெரிவித்தார்

மருத்துவம் படித்தவுடன் மற்றவர்களை போல நகரத்தின் முக்கிய இடங்களில் கிளினிக் துவங்காமல் லீயின் நோக்கம் வேறு திசை மாறியது, தனது சொந்த ஊருக்கு சென்று குறைவான செலவில் தரமான மருத்துவம் அளிக்க விரும்பினார். ஆரம்பத்தில் இது சற்று சிரமமாக இருந்த போதும் தொடர்ந்து அந்த மக்களின் உற்சாகம் மற்றும் நண்பர்களின் உதவியுடன் செம்மையாக செயல்பட்டவர்.

கடந்த ஆண்டு மீண்டுமாக மூளை சார்ந்த டையலிஸிஸ்க்கு உள்ளானார், இதனால் அவரது தற்போதைய நிலை மாறியிருக்கலாம் ஆனால் எனக்கான மக்களை நோக்கிய தொண்டு இலக்கு  மாறாது என லீ தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மருத்துவம் வியாபாரம் ஆக்கப்பட்ட இத்தகைய  கால கட்டத்தில் ஆங்காங்கே இது போன்ற உண்மையான கடவுள்களும் மனித உருவில் நடமாடிதான் வருகின்றனர்.

இவர் ஏழை எளிய மக்களிடம் மருத்துவத்திற்கு பணம் வாங்குவதில்லை. அதே சமயம் விரும்பி கொடுத்தால் அதனை மட்டும் அளவோடு ஏற்றுக் கொள்கிறார்.