பெற்ற தாயுடன் திருமணம்..! பிறகு விவாகரத்து..! தொடர்ந்து அண்ணன் மனைவியுடன் கல்யாணம்..! மிரள வைத்த இளைஞன்! அதிர வைக்கும் காரணம்!

சீனாவில் அரசு இலவசமாக வீடு கட்டி கொடுப்பதால் ஒரே மாதத்தில் 23 முறை திருமணம் செய்த 11 பேர் மாமியார் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.


சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ளது லிஷூய் கிராமம். இங்கு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ஏழை மக்களுக்கு சீன அரசு இலவசமாக வீடு கட்டி கொடுத்து வருகிறது.  

இலவசமாக வீடு கட்டிக் கொடுப்பதால் எப்படியாவது நிறைய வீடுகள் கட்டிக் கொள்ளவேண்டும் என 11 பேர் சேர்ந்து திட்டமிட்டனர். இத் நிலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிராம மக்களுக்கு இலவச வீடு கட்டித் தரப்படும் என சீன அரசு தெரிவித்திருந்தது. திருமணமாகி வசித்து வந்த ஒரு தம்பதி சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்றது.

விவாகரத்து செய்தால் வீடு கிடைக்காது என்பதால் விவாகரத்து செய்த மனைவியையே மீண்டும் திருமணம் செய்து அந்த சான்றிதழை காட்டி இலவச வீடு பெற்றுள்ளார். வீடு கிடைத்த உடன் அந்த மனைவியை விவகாரத்து செய்த கணவன் அவரது அண்ணியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அண்ணியையும் விவாகரத்து செய்துவிட்டு அவரது தாயையும் திருமணம் செய்து கொண்டார்.

அந்த சான்றிதழை காட்டியும் வீட்டை பெற்றுக் கொண்டார். இப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே திருமணம் செய்தும் விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்தும் வீடு பெற்றது அக்கம்பக்கத்தினருக்கு கண்ணுக்கு பொறுக்க முடியவில்லை. வழக்கம்போல் போலீசாருக்கு போட்டுக் கொடுத்தனர். பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில் ஒரே மாதத்தில் 23 திருமணம் செய்து வீடு பெற்ற 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.