சீன வைரஸால் உலகிற்கே ஆபத்து..! எத்தனை கோடி பேர் உயிர் இழக்கும் ஆபத்து..?

இப்போது இரண்டு பேர் சந்தித்துக்கொண்டால், கொரோனா வைரஸ் பற்றி அச்சத்துடன் உரையாற்றும் வகையில் நிலவரம் கலவரமாகிவருகிறது. சீனாவில் இந்த விவகாரம் தேசியப் பேரிடர் என்று அறிவிக்கும் வகையில் உள்ளதாக தெரியவந்திருக்கிறது.


ஏனென்றால், சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு வாரத்தில் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. மேலும் மேலும் பல்வேறு நபர்களுக்குப் பரவிக்கொண்டிருக்கும் இந்த வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனால், ஐ.நா.வின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனம், ‘கொரோனா தாக்குதலை ஒரு அசாதாரண நிகழ்வு’ என்று வரையறுக்கிறது. மேலும், ‘சீனாவுக்கு மட்டுமல்ல, மற்ற நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதால் இந்த வைரஸை ஒடுக்க சர்வதேச முயற்சி தேவை’ என்றும் கூறியுள்ளது.

மேலும், ‘‘சீனாவிலிருந்து இந்த வைரஸ் பல நாடுகளுக்கும் பரவுவதை உலக நாடுகள் அச்சத்துடன் பார்க்கின்றன. சீனாவில் இதுவரை 240க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர், அதே நேரத்தில் 8,200 நோயாளிகள் உள்ளனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் 7 கோடி மக்கள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும்’’ என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

உஷார் மக்களே உஷார்.