இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஓபன் செய்து பலான வீடியோ பார்க்கும் குரங்கு! வைரல் புகைப்படம்!

சிம்பன்சி குரங்கு ஒன்று இன்ஸ்டாகிராம் ஐ பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.


குரங்கு போல் சேட்டை செய்யாதே என்று பிள்ளைகளை பெற்றோர் திட்டுவது வாடிக்கை. அந்த அளவுக்கு மனிதனுக்கும் குரங்குக்கும் ஆன தொடர்பு உள்ளது. ஆனால் தற்போது குரங்குகள் அனைத்தும் மனிதர்களைப் போல் சேட்டை செய்ய ஆரம்பித்துவிட்டன. மனிதர்கள் செய்யும் அனைத்தையும் கிட்டத்தட்ட குரங்குகள் அப்படியே செய்கின்றன.

தற்போது மனிதர்கள் மத்தியில் ஒரு போதை பொருளாக மாறிப்போன செல்போன் பயன்பாட்டையும் குரங்குகள் அத்துப்படியாக வைத்துள்ளன என்பதற்கு தற்போது வைரல் ஆகி வரும் வீடியோ ஒன்றே சாட்சி. அந்த வீடியோவில் சிம்பன்சி குரங்கு ஒன்று செல்போனை மிகவும் லாவகமாக கையாள்கிறது.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகுந்து விளையாடுகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த குரங்கு பார்த்து ரசிக்கிறது. மேலும் தனக்கு எதைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அந்த பலான வீடியோவை தேர்வு செய்து அந்த குரங்கு பார்ப்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம். இந்த வீடியோ 60 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.