அடுத்த முறை வைரமுத்துவை பார்த்தால் கன்னத்தில் ஒன்று கொடுப்பேன்! சின்மயி திடீர் மன மாற்றம்!

வைரமுத்துவை அடுத்த முறை பார்க்க நேர்ந்தால் கன்னத்தில் பளார் விடுவேன் என்று சின்மயி கூறியுள்ளார்.


சென்ற வருடம் மீடூ என்ற ஒரு சமுதாய நகர்வின் மூலம் மிகப் பெரிய சர்ச்சை கிளம்பியது. பெண்கள் பலரும் தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஆண்கள் மூலம் பாலியல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பலரும் தங்களது குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் அதேபோல்தான் தமிழ் கவிஞர் வைரமுத்துவின் மீதும் பாடகி சின்மயி குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

 மேலும் வெளிநாடுகளுக்கு சூட்டிங் சென்றபோது தன்னை அவர் ‘அதற்கு’ அழைத்தார் என்று வைரமுத்து மீது சின்மயி குற்றம் சாட்டி இருந்தார். பின்னர் இது குறித்து பல சர்ச்சைகள் நடந்து முடிந்து தற்போது அந்தப்பிரச்சனை ஓய்வு அடைந்துள்ளது .இந்நிலையில் பெங்களூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின்குஷ்புவின் மீது ஒரு நபர் அநாகரிகமாக நடக்க முயன்றார்.

இதனை பார்த்த குஷ்பு உடனடியாக அந்த நபரின் கன்னத்தில் பளார் என்று அறை விட்டார் .இந்த செயலை தற்போது சின்மயி வரவேற்று பேசியுள்ளார்.  மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தனது ரசிகர் ஒருவருக்கு பதில் கூறியுள்ளார். மேலும் அடுத்த முறை நான் வைரமுத்துவை பார்க்கும்போது கண்டிப்பாக எனது நீதியை பெறுவேன், அவரை கண்டிப்பாக கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுவேன். 

அந்த தைரியம் இப்போது உள்ளது என்றும் முன்பை போல் இல்லாமல் தற்போது தனது மனம் மாறியுள்ளது என்றும் மீண்டும் சர்ச்சையாக ட்வீட் செய்துள்ளார் சின்மயி.