அப்பா போட்ட சடன் பிரேக்! பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த கொடுரம்!

பெற்றோர்கள் கண்முன்னே குழந்தைக்கு நடந்த கோர சம்பவம்!!


சென்னையில் பூந்தமல்லி அருகே பெற்றோர்கள் கண்முன்னே அவர்களது குழந்தை துடி துடித்து இறந்த சம்பவம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி வெங்கடேஷ் மற்றும் அருள்மொழி. இவர்களுக்கு  பிறந்து 18 மாதங்களே ஆன வானியா எனும் குழந்தை உள்ளது.

இவர்கள் இருவரும் மெட்ரோ அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால், குழந்தையை வீட்டில் பராமரிக்க ஆள் இல்லாமல், தங்களுடன் அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல தங்களது இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் இருவரும் செல்லுகையில், அருகே வந்த வாகனம் இவர்கள் வந்த வண்டியை மோதியதில், நிலை குலைந்து கீழே விழுந்தனர்.

குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தது.

இதனால், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராவில் சம்மந்தப்பட்ட வாகனத்தை தேடி வருகின்றனர்.